ரஷ்ய தடுப்பூசி சோதனையில் பிலிப்பீன்ஸ் ஆர்வம்

ரஷ்ய தடுப்பூசி சோதனையில் பிலிப்பீன்ஸ் ஆர்வம்

1 mins read
50b7d344-8207-4a5f-838e-b215ba5b20d6
தாய்லாந்தில் உள்ள தேசிய குரங்குகள் ஆய்வு நிலையத்தில் புதிய தடுப்பு மருந்து பரிசோதனைக்காக, முதல் கட்டமாக 13 குரங்குகளுக்கு செலுத்தப்பட்டதை மருத்துவர் சுசிந்தா மலைவிடிஜ்னோன்ட் மேற்பார்வையிட்டார். படம்: ஏஎஃப்பி -

மணிலா: உலகிலேயே ரஷ்யா கொரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்துள்ளது.

ரஷ்யாவில் மக்கள் அந்தத் தடுப்பூசியை போட்டுக் கொள்ளவும் அதிபர் புட்டின் அனுமதி அளித்துள்ளார். அவரது இரண்டு மகள்களில் ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரஷ்யா உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களிடம் சோதிக்கும் சோதனையில் பங்கேற்க பிலிப்பீன்ஸ் ஆர்வம் காட்டி வருகிறது.

இதற்காக தடுப்பூசி ஆய்வு விவரங்களை பிலிப்பீன்ஸ் கேட்டு உள்ளது. ரஷ்யா தடுப்பூசி கண்டு பிடித்து உள்ளதை நேற்று பாராட்டிய பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே பொது மக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று வலியுறுத் தினார். ரஷ்ய தடுப்பூசிக்கு 'ஸ்புட்னிக் V' எனப் பெயரிடப் பட்டுள்ளது. முன்னாள் சோவியத் யூனியன் விண்வெளிக்கு அனுப் பிய உலகின் முதல் செயற்கைக் கோளான ஸ்புட்னிக் நினைவாக தடுப்பூசிக்கு அப்பெயர் சூட்டப் பட்டுள்ளது.