லண்டன்: ஸ்காட்லாந்தில் நேற்று காலை பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டதில் பலர் காயம் அடைந்ததாக நேற்று மாலை வெளியான தகவல்கள் தெரிவித்தன. ஸ்டோனஹாவன் அருகே உட்லண்ட் வட்டாரத்தில் ரயில் தடம் புரண்டது. ஏராளமான போலிசாரும் மீட்புப்படை யினரும் அவசர சிகிச்சை, தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
ரயில் விபத்தில் பலர் காயம்
1 mins read
விபத்து நடந்த இடத்தில் புகை வெளியேறும் காட்சி. படம்: தெடெரிகூ/ டுவிட்டர் -