தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எச்1பி விசா கட்டுப்பாடுகளில் தளர்வு

1 mins read
5be654ef-474d-4cc5-8d2a-e2d0c56303e7
-

அமெரிக்காவின் எச்-1 பி வேலை விசா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிமுகம் காணவுள்ளன. இந்த விசாவைப் பயன்படுத்தி இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் வேலை செய்து வருகின்றனர்.

ஏற்கெனவே வேலை பார்த்தவர்கள் எச் 1 பி விசா மூலம் மீண்டும் அமெரிக்கா திரும்பி பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எச் 1 பி விசா ஊழியர்கள் தங்களது மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வரலாம் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுநோயால் வேலையின்மை மோசமடைந்ததை அடுத்து, அமெரிக்க தொழிலாளர்கள் சந்தையைப் பாதுகாக்க எச்-1பி மற்றும் எல்1 விசாக்களுடன் குடியேறியவர்கள் அல்லாத சிலரை இந்த ஆண்டு இறுதி வரை நுழைவதற்கு தடை விதிக்கும் உத்தரவை அதிபர் டிரம்ப் ஜூன் மாதத்தின்போது வெளியிட்டார்.