ராஜபக்சே குடும்பத்தினர் நால்வருக்கு அமைச்சரவை பொறுப்புகள்

இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு அமைச்சரவைப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.அதிபர் கோத்தபாய ராஜபக்சே தலைமையிலான நிர்வாகத்தில் அவரது அண்ணனும் முன்னாள் அதிபருமான மஹிந்த ராஜபக்சே பிரதமராகக் கடந்த வாரம் பொறுப்பேற்றுள்ளார்.

இவர்களது பதவிப் பிரமாண விழா, இலங்கையின் பிரபல புத்த ஆலயமான தலதா மாளிகையில் நடைபெற்றது. அதிபர் கோத்தபாய ராஜபக்சே தற்காப்பு அமைச்சராகப் பொறுப்பேற்றார். நிதித்துறை, நகர சீரமைப்பு, பௌத்த விவகாரங்கள் ஆகிய அமைச்சுகளுக்கு மஹிந்த ராஜபக்சே பொறுப்பேற்றார். அத்துடன் அவரது அண்ணன் சமால் ராஜபக்சே நீர்ப்பாசன அமைச்சராகவும் மகன் நமல் ராஜபக்சே விளையாட்டு, இளையர் அமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.

இம்மாதம் ஐந்தாம் தேதியன்று நடைபெற்ற தேர்தலில் ராஜபக்சே சகோதரர்களின் இலங்கை மக்கள் கட்சி 145 நாடாளுமன்ற இடங்களை வென்று பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ளது. 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் கூட்டணி கட்சிகளுக்கு 5 இடங்கள் கிடைத்தன.

திரு மஹிந்த ராஜபக்சேயின் உறவினர் மகனான சசீந்திர ராஜபக்சே, அமைச்சரவையில் இல்லாத பொறுப்பான வேளாண்மை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்குகளை வென்ற இவர்கள், அரசமைப்புச் சட்டங்களை மாற்றுவதற்கு அதிகாரம் உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!