கொவிட்-19: இந்தியாவில் ஆக மலிவான ஃபெவிபிரவிர் மருந்து வெளியீடு

கொவிட்-19: இந்தியாவில் ஆக மலிவான ஃபெவிபிரவிர் மருந்து வெளியீடு

1 mins read
7ac9b91a-966c-43eb-921a-9e7f6f5f4321
ஃபெவிபிரவிர் (T-705) ரசாயன சேர்மம். -

கொவிட்-19 சிகிச்சைக்காகப் பயன்படுத்தக்கூடிய ஆக மலிவான ஃபெவிபிரவிர் மருந்தை 200 கிராமுக்கு 33 ரூபாய்க்கு விற்கப்போவதாக எம்எஸ்என் மருந்தகத் தயாரிப்பு குழுமம் தெரிவித்துள்ளது. 'ஃபவிலோ' என்ற நிறுவனத்தின் சின்னத்தின்கீழ் இந்தியாவின் பல்வேறு மருந்தகங்களில் அது விற்பனை காணும்.

இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வு, மேம்பாட்டு குழு இந்த மருந்தைச் சொந்தமாகத் தயாரித்துள்ளது.

"சிறந்த தரமான மருந்து அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக இருக்கவேண்டும்," என்று எம்எஸ்என் நிறுவனம் தெரிவித்தது.