கமலா ஹாரிசுக்குத் தகுதியுண்டா? ஐயமெழுப்பும் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள கமலா ஹாரிசுக்குப் பிறப்பின் அடிப்படையில் போட்டியிடத் தகுதியிருக்கிறதா என அதிபர் டோனல்ட் டிரம்ப் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

திருவாட்டி கமலா பிறந்தபோது அவரது பெற்றோர் அமெரிக்கக் குடிமக்கள் இல்லை என்பதால் அவர் இயல்பிலேயே அமெரிக்கக் குடிமகள் இல்லை என்று சேப்மன் பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியர் ஜான் ஈஸ்ட்மேன் ஒரு பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

அதைச் சுட்டியே, அதிபர் டிரம்ப் இப்போது திருவாட்டி கமலாவின் பிறப்புரிமைத் தகுதி குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார்.

திருவாட்டி கமலாவின் தாய் சென்னையில் பிறந்தவர்; தந்தை ஜமைக்காவில் பிறந்தவர். ஆனால், திருவாட்டி கமலா 1964ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவின் ஓக்லாந்தில் பிறந்தார். ஆகையால், பிறப்பின் அடிப்படையில் அவருக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டது.

இதேபோன்று, முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் அமெரிக்காவில் பிறந்தவர் இல்லை என்று டிரம்ப் தொடர்ந்து கூறி வந்துள்ளார்.

இதற்கிடையே, திருவாட்டி கமலாவின் பிறப்புரிமைத் தகுதி குறித்து கேள்வி எழுப்புவது சிறுபிள்ளைத்தனமானது என்று திரு இர்வின் செமரின்ஸ்கி எனும் அரசியலமைப்பு சட்ட வல்லுநர் சாடி இருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!