நேப்பாளத்தின் மலைப்பகுதியில் நிலச்சரிவு; புதையுண்ட வீடுகள்

நேப்பாளத்தில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் பல வீடுகள் தரைமட்டமானதுடன் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டுவுக்கு அருகிலுள்ள சிந்துபல்ஷொக் என்ற கிராமத்தில் இந்த அசம்பாவிதம் இன்று காலை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 28 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தொடர் மழையாலும் சகதியாலும் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இவ்வாண்டில் மட்டும் வெள்ளத்தாலும் நிலச்சரிவுகளாலும் இதுவரை 215 பேர் உயிழந்தனர் என்றும் 85 பேர் காணவில்லை என்றும் அதிகாரபூர்வ தகவல்கள் குறிப்பிடுகின்றன.

40,000 பேர் தங்கள் வீடுகளில் தங்காமல் வேறு இடங்களில் தங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon