கமலா ஹாரிஸ் கேலிச்சித்திரத்தால் சர்ச்சை

கமலா ஹாரிஸ் கேலிச்சித்திரத்தால் சர்ச்சை

1 mins read
edaa89c2-19a0-45af-a7b6-4babea25af17
(படம்: டுவிட்டர்) -

ஆஸ்திரேலியாவின் முக்கிய தேசிய நாளிதழ் ஒன்று, அமெரிக்காவின் துணையதிபருக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசைச் சித்திரிக்கும் கேலிச்சித்திரத்தை வெளியிட்டுள்ளது.

திருவாட்டி ஹாரிசை 'மாநிறப் பெண்' என்று அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் சிரித்துக்கொண்டே கூறுவதை இந்தக் கேலிச்சித்திரம் காட்டுகிறது.

இது குறித்த கண்டனங்கள் இணையத்தில் வெளிவந்தபோதும் கேலிச்சித்திரத்தை வெளியிட்ட 'தி ஆஸ்திரேலியன் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் கிறிஸ்டபர் டோர் பின்வாங்கவில்லை. திரு பைடன் தமது உரையிலும் டுவிட்டர் பதிவிலும் உண்மையிலேயே அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகச் சுட்டிய அவர், இதற்கு கேலிச்சித்திர ஓவியர் பொறுப்பல்ல எனக் கூறினார். மேலும் இனவாதத்தைத் தாக்குவது தான் ஓவியரின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.