நஜிப் மனு தள்ளுபடி

நஜிப் மனு தள்ளுபடி

1 mins read
71e3494a-6727-4032-88ac-26ec549c99dc
இவ்வாரம் திங்கட்கிழமை உயர் நீதிமன்றத்திற்குச் சென்றிருந்த மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக். (படம்: ஏஎஃப்பி) -

கோலாலம்பூர்: மலேசிய அரசாங்க முதலீட்டு நிறுவனமான '1எம்டிபி'யின் தணிக்கை அறிக்கையைத் திருத்தியதாக தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் கோரிக்கையை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

அரசுத் தரப்பு கொண்டு வந்திருக்கும் இந்தக் குற்றச் சாட்டு மீதான வழக்கு விசாரணை முடிந்த பின்னரே நஜிப்பின் கோரிக்கையைப் பரிசீலிக்க முடியும் என்று நீதிபதி தெரிவித்துவிட்டார்.

தலைமைச் சட்ட அதிகாரி இறுதி செய்த தணிக்கை அறிக்கையை 1எம்டிபி முன்னாள் தலைமை நிர்வாகி அருள் கந்தாவுடன் இணைந்து திருத்தியதாக நஜிப் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.