ஜோக்கோவி: $254 பில்லியன் வரவுசெலவுத் திட்டம்

ஜோக்கோவி: $254 பில்லியன் வரவுசெலவுத் திட்டம்

1 mins read
62d4dc3c-72b0-4745-9d7e-52a67128028d
ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்தோனீசியாவின் 75 குடியரசு தினத்தைக் கொண்டாட்டத்தை ஒட்டி இந்தோனீசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் உள்ள சுரபாயாவில் பல்வேறு போட்டிகளுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டன. படம்: ஏஎப்பி, ஜுனி கிறிஸ்வந்தோ -

ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ அடுத்த ஆண்டுக்கு 2,747.5 டிரில்லியன் ரூப்பியா (S$254 பில்லியன்) மதிப்பிலான வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய முன்மொழிந்துள்ளார். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.5% பற்றாக்குறைத் திட்டமாக இருக்கும்.

பொருளியல் மீட்சியை முடுக்கிவிடும் விதமாக வரவுசெலவுத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட திரு ஜோக்கோவி, பொருளியல் ரீதியான ஆதரவு தொடரும் என்றும் உறுதியளித்தார்.