வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தொடரும் கிருமித்தொற்று

வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தொடரும் கிருமித்தொற்று

1 mins read
c5e82bce-781c-4db2-aac4-cac52454f154
-

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் அனைத்து விடுதிகளில் சோதனை முழுமையாகச் செய்யப்பட்டுவிட்டதாக சுகாதார அமைச்சு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இருந்தபோதும் இரண்டு இடங்களிலிருந்து ஊழியர்களுக்குப் புதிதாக கிருமித்தொற்று ஏற்பட்டதாக பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.

புதன்கிழமையன்று கிட்டத்தட்ட 22, 800 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்கள் தனிமையிலிருக்கும் காலம் முடிவடையும் நேரத்தில் அவர்கள் சோதிக்கப்படும்போது கிருமித்தொற்றுகள் புதிதாகப் பதிவாகலாம்.

இந்தச் சோதனைகளால் தினசரி எண்ணிக்கை படிப்படியாகத்தான் குறையும் என்று சுகாதார அமைச்சு கூறியது.

முன்னதாக கிருமித்தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட ஊழியர்களுக்கும் புதிதாக இந்நோயைத் தொற்றும் அபாயம் உள்ளது. ஒரே ஒரு ஊழியருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டாலும் 800 ஊழியர்கள் தனிமைப்படுத்தபட்டது ஏன் என்பது குறித்தும் பதிலளித்த சுகாதார அமைச்சு, அந்த 800 பேர் எதிர்நோக்கக்கூடிய அபாயத்தின் காரணமாக தனிமைப்படுத்த்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

ஆயினும், கொரோனாவிலிருந்து குணமடைந்த ஊழியர்கள் 90 நாட்களுக்குப் பின்னர் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள். இத்தகையோருக்கு நோய் எதிர்ப்புசக்தி உருவாகி இருப்பதாக தற்போதைய மருத்துவ ஆதாரங்கள் காட்டுகின்றன.