நிபுணர்கள்: பூனைகளுக்கான மருந்து கொவிட்-19 நோயாளிகளுக்கு உதவலாம்

நிபுணர்கள்: பூனைகளுக்கான மருந்து கொவிட்-19 நோயாளிகளுக்கு உதவலாம்

1 mins read
319fc00b-1e07-4c1d-82c0-0293c1c044fe
-

தற்போது சோதனை செய்யப்பட்டுவரும் பூனை மருந்துகள் இரண்டு கொவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க உதவலாம் என்று விலங்கு மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

பூனைகளை மட்டும் பாதிக்கக்கூடிய 'ஃபீலைன் என்டெரிக் கொரோனாவைரஸ்' (FeCV) என்ற கொரோனா கிருமி வகை ஒன்று, பூனைகளின் குடல் பகுதியை பாதிக்கிறது. இந்நோயைத் தொற்றும் பத்து பூனைகளில் ஒன்று உடல் முழுதும் வீக்கம் அடைந்து பின்னர் இறக்கிறது.

பாதிக்கப்பட்ட பூனைகளுக்கான இந்த மருந்து, மனிதர்களைப் பாதிக்கக்கூடிய 'சார்ஸ்-கோவ்-2' நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் பயன்படலாம் என்று 'செல் ரிப்போர்ட்ஸ்' மருத்துவ சஞ்சிகை வெளியிட்டுள்ள ஆரம்பக்கட்ட ஆய்வுகள் கோடிகாட்டுகின்றன.

ஜிசி376, ஜிஎஸ்-441524 என்ற அந்த மருந்துகளில் மற்ற விலங்குகளைக் குணப்படுத்தும் ஆற்றல் இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, ஜிஎஸ்-441524. ரெம்டெசிவிர் மருந்தைப் போல விலங்கு உடலில் வேலை செய்வதாக 'சைன்ஸ் நியூஸ்' அறிவியல் செய்தித்தளம் காட்டுகிறது.

இதுவரை இந்த மருந்துகள் இரண்டும் மனிதர்களிடத்தில் சோதிக்கப்படவில்லை