தூண்டில் போட்டவரை மீன் கொன்றது

1 mins read
418b443e-2149-4dc8-820d-eee030822e81
கோப்புப் படம். -

சிட்னி: ஆஸ்திரேலியாவின் டார்வின் துறைமுகப்பகுதியில் தன் குடும்பத்தார், நண்பர்களுடன் படகில் சென்று தூண்டில் போட்டு மீன் பிடித்துக்கொண்டு இருந்த 56 வயது ஆடவரை ஒரு மீன் கொன்றுவிட்டது என்று போலிசார் இன்று கூறினர்.

தூண்டில் போட்டுக்கொண்டு இருந்தபோது ஒரு பெரிய மீன் அவரின் மார்பில் பாய்ந்து தாக்கியது என்றும் உடனே அவரைக் கரைக்குக் கொண்டு வந்து அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட தாகவும் அதிகாரிகள் கூறினர். ஆனால் அவர் மாண்டுவிட்டார்.