லத்தீன் அமெரிக்க நாடுகளில் கொரோனா கோரத்தாண்டவம்

லத்தீன் அமெரிக்க நாடுகளில் கொரோனா கோரத்தாண்டவம்

2 mins read
e9265a9c-3bfd-488d-bb3f-5f4afa3f5225
சிலி நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்த பணியமர்த்தப்பட்டுள்ள போலிஸ்காரர்கள். படம்: இபிஏ -

சாண்­டி­யாகோ: லத்­தீன் அமெ­ரிக்க நாடு­களில் கொவிட்-19 கிருமி தொடர்ந்து வேக­மா­கப் பரவி வரு­வ­தாக அச்­சம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பிரே­சில், பெரு, சிலி உள்­ளிட்ட நாடு­களில் வெள்­ளிக்­கி­ழமை நிலவரப்­படி கிருமி தொற்­றி­யோ­ரின் எண்­ணிக்கை 6 மில்­லி­ய­னைக் கடந்­து­விட்­டது. 237,360 பேர் மர­ணம் அடைந்­து­விட்­ட­னர்.

உல­கப் பாதிப்­பில் ஏறக்­கு­றைய மூன்­றில் ஒரு பங்கு லத்­தீன் அமெ­ரிக்­கா­வில் ஏற்­பட்­டுள்­ள­தாக ராய்ட்­டர்ஸ் புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

லத்­தீன் அமெ­ரிக்க நாடு­கள் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தி­வ­ரும் நிலை­யில் அங்கு கிரு­மித்­தொற்று அதி­க­மாகி வரு­கிறது.

இத­னி­டையே, நேற்று மதிய நில­வ­ரப்­படி உல­கம் முழு­வ­தி­லும் கிருமி தொற்­றி­யோ­ரின் மொத்த எண்­ணிக்கை 21 மில்­லி­ய­னுக்­கும் அதி­கம். குண­ம­டைந்­தோர் ஏறக்­கு­றைய 14.1 மில்­லி­யன் பேர்.

பலி­யா­னோர் எண்­ணிக்கை 763,539 ஆக இருந்­தது. அமெ­ரிக்கா, பிரே­சில், இந்­தியா, ரஷ்யா, தென்­னாப்­பி­ரிக்கா ஆகிய நாடு­கள் அதி­கம் பாதிப்­புள்ள நாடு­கள் பட்­டி­ய­லில் உள்­ளன.

இத­னி­டையே, கொவிட்-19 கிருமி பல நாடு­களில் மீண்­டும் தலை­தூக்கி வரு­கிறது.

தென்­கொ­ரி­யா­வில் கிரு­மித் தொற்று ஐந்து மாத காலத்­தில் இல்­லாத அள­வுக்கு அதி­க­மா­னதை அடுத்து சோல் நக­ரின் பல பகு­தி­க­ளி­லும் பாது­காப்பு இடை­வெளி நிபந்­த­னையை நிர்­வா­கம் கடு­மை­யாக்­கி­யது.

அந்த நாட்­டில் ஒரே நாளில் 166 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர். தலை­ந­க­ரைச் சுற்­றி­லும் தலை­ந­க­ரி­லும் அபா­யச் சங்கு ஊதும் அள­வுக்­குத் தொற்று பெருகி வரு­வ­தா­கத் தக­வல்­கள் தெரி­வித்­தன.

இவ்­வே­ளை­யில் நியூ­சி­லாந்­தில் நேற்று ஏழு பேருக்­கு கொவிட்-19 தொற்­றி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. நாட்­டின் ஆகப்­பெ­ரிய நக­ரான ஆக்­லாந்­தில் முடக்­கம் மேலும் நீட்­டிக்­கப்­பட்­டது.

ஐரோப்­பா­வி­லும் கொரோனா மீண்­டும் வேக­மாக தலை எடுப்­ப­தால் புதிய அச்­சம் கிளம்­பி­வ­ரு­கிறது. பிரான்ஸ், நெதர்­லாந்து நாடு­களில் தொற்று அதி­க­மாக பர­வு­வ­தால் அங்கு விடு­முறை நிமித்­தம் சென்ற ஆயி­ரக்­க­ணக்­கான பிரிட்­டிஷ் மக்­கள் பர­ப­ரப்­பாக நாடு திரும்­பு­கி­றார்­கள்.

அந்த நாடு­களில் இருந்து பிரிட்­டன் வரு­வோ­ருக்­குப் புதிய கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­படும் என்­ப­தால் பல­ரும் உட­ன­டி­யாக திரும்­பு­கி­றார்­கள். ஜப்­பான் தலை நகர் தோக்­கி­யோ­வில் புதி­தாக கிருமி தொற்­றி­யோ­ரின் எண்­ணிக்கை 2வது நாளாக நேற்று 300க்கும் அதி­க­மாக இருந்­தது.