ஃபேஸ்புக் முயற்சி

ஃபேஸ்புக் முயற்சி

1 mins read
c19ad8d2-c757-43fd-9663-659136168373
படம்: ராய்ட்டர்ஸ் -

சான்பிரான்சிஸ்கோ: ஃபேஸ்புக் நிறுவனம் தனது இன்ஸ்டகிராம் மற்றும் மெசெஞ்சர் சேவைகளின் உரையாடல் அம்சத்தை ஒன்றிணைக்கத் தொடங்கி இருக்கிறது என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட புதிய தொழில்நுட்ப இணைய வாசலான 'தி வெர்ஜ்' தெரிவித்துள்ளது.

இம்மாற்றங்கள் ஆப்பிள், ஆன்ட்ராய்டு கருவிகளில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயலிகள் புதுப்பிக்கப்படும் போது இடம்பெறும் என்று பயனீட்டாளர்களின் தகவல் களை மேற்கோள்காட்டி 'தி வெர்ஜ்' குறிப்பிட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்டதும் இன்ஸ்டகிராம் செயலியில் மெசெஞ்சர் சேவைகள் சேர்க்கப்படும். ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் நண்பர்களுடன் உரையாடும் திறனும் புதிய செயலியில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இருந்தாலும் புளூம்பர்க் நிறுவனம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தவில்லை.