ஆட்­க­டத்­தல்: பிலிப்­பீன்ஸுடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள மலேசியா விருப்பம்

ஆட்­க­டத்­தல்: பிலிப்­பீன்ஸுடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள மலேசியா விருப்பம்

1 mins read
3da60246-9224-4d29-9fa9-1e0e50557ad5
படம்: ராய்ட்டர்ஸ் / லிம் ஹுயே தெங் -

மணிலா: பிலிப்­பீன்­சில் வெளி­நாட்­டி­னர் பல­ரைக் கடத்­திச் சென்று தலை­யைத் துண்­டித்­த­தா­கக் கூறப்­படும் அபு சாயஃப் அமைப்­பின் உறுப்­பி­னர் இடாங் சுசு­கான் கைதாகி இருப்­பதை அடுத்து பதி­லடித் தாக்­கு­தல்­கள் நடக்­கக்­கூ­டும் என்­ப­தால் அந்த நாட்­டில் பாது­காப்­புப் படை­கள் விழிப்பு நிலை­யில் வைக்­கப்­பட்­டுள்­ளன.

அந்­தப் பயங்­க­ர­வாதி மீது 23 கொலைக் குற்­றச்­சாட்­டு­கள் ஐந்து ஆட்­க­டத்­தல் மற்­றும் ஆறு கொலை முயற்சி குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டுள்­ள­தாக போலிஸ் கூறி­யது.

இத­னி­டையே, சுசு­கான் பிடி­பட்­டதை அடுத்து பிலிப்­பீன்ஸ் போலி­சு­டன் சேர்ந்து செயல்­பட்டு பல தக­வல்­களைத் தெரிந்­து­கொள்ள மலே­சி­யப் போலிஸ் விரும்­பு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மலே­சி­யா­வின் சாபா மாநி­லத்­தில் இடம்­பெற்ற ஆட்­க­டத்­தல் சம்­ப­வங்­களில் அந்­தப் பயங்­க­ர­வா­திக்­குத் தொடர்பு இருப்­ப­தாக தெரி­ய­வந்­துள்­ள­தாக சாபா மாநில பாது­காப்­புத் தள­பத்­தி­யத்­தின் தள­பதி ஹசானி கசாலி தெரி­வித்­தார்.

அதன் தொடர்­பில் தங்­கள் வேவுத்­துறை திரட்டி உள்ள தக­வல்­களைப் பகிர்ந்­து­கொண்டு மேல் விவ­ரங்களைப் பெறும் வகை­யில் பிலிப்­பீன்ஸ் போலி­சு­டன் தொடர்பு கொள்­ளப்­போ­வ­தாக அவர் கூறி­னார்.