தாய்லாந்து: ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற அரசாங்க எதிர்ப்புப் பேரணி

தாய்லாந்து: ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற அரசாங்க எதிர்ப்புப் பேரணி

2 mins read
aefe7cec-ceab-4a32-b8ca-f6e6cafa0fc4
ஜன­நா­யக ஆத­ரவு இயக்­கத்தை வழி­ந­டத்­திய பிர­பல மாண­வர் தலை­வர் பாரிட் சிவா­ராக், வெள்­ளிக்­கி­ழமை இரவு கைது செய்­யப்­பட்­டார். இருப்­பி­னும் மறு­நாளே அவர் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார். பேங்­காக்­கில் நேற்று நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டத்­தில் அவ­ரும் கலந்­து­கொண்­ட­தா­கத் தெரி­கிறது. படம்: ஏஎப்பி -

பேங்­காக்: அர­சாங்க எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டம் கார­ண­மாக நேற்று தாய்­லாந்து தலை­ந­கர் பேங்­காக்­கில் பதற்­றம் நில­வி­யது.

ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் பங்­கேற்ற எதிர்ப்­புப் பேரணி நாடு மாற்­றம் காண­வேண்­டும் என்ற நோக்­கத்­தில் நடத்­தப்­பட்­டது. பிர­த­மர் பிர­யுத் சான் ஓ சா தலை­மை­யி­லான அர­சாங்­கம் உட­ன­டி­யாக விலக வேண்­டும், அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டங்­கள் மாற்­றப்­பட வேண்­டும். அர­சாங்க எதிர்ப்­பா­ளர்­கள் துன்­பு­றுத்­தப்­ப­டு­வது கைவி­டப்­பட வேண்­டும் என்­பன போன்ற கோரிக்­கை­களை ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் வலி­யு­றுத்­தி­னர்.

பிர­த­மர் பிர­யுத் சான் ஓ சா இதற்கு முன்­னர் ராணு­வத் தள­ப­தி­யாக இருந்­த­வர். ஆறாண்­டு­க­ளுக்கு முன்­னர் ராணு­வப் புரட்சி மூலம் ஆட்­சி­யைக் கைப்­பற்றி இன்­று­வரை ஆட்­சி­யில் இருந்து வரு­கி­றார். அவர் பதவி விலகி ஜன­நா­யக முறைப்­படி தேர்­தல் நடத்­தப்­பட வேண்­டும் என்று கோரி தாய்­லாந்­தில் அவ்­வப்­போது ஆர்ப்­பட்­டங்­கள் நடை­பெற்று வரு­கின்­றன. குறிப்­பாக, கடந்த மாதம் கிட்­டத்­தட்ட எல்லா நாட்­க­ளுமே தாய்­லாந்­தில் ஆர்ப்­பாட்­டம் நடை­பெற்­றுக் கொண்டு இருந்­த­தாக ஊட­கங்­கள் குறிப்­பி­டு­கின்­றன.

ஜன­நா­யக ஆத­ரவு இயக்­கத்தை வழி­ந­டத்­திய பிர­பல மாண­வர் தலை­வர் பாரிட் சிவா­ராக், வெள்­ளிக்­கி­ழமை இரவு கைது செய்­யப்­பட்­டார். இருப்­பி­னும் மறு­நாளே அவர் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார். பேங்­காக்­கில் நேற்று நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டத்­தில் அவ­ரும் கலந்­து­கொண்­ட­தா­கத் தெரி­கிறது.

பிணை­யில் விடு­விக்­கப்­பட்­ட­போது காவல் நிலை­யத்­தில் வெளியில் திரண்­டி­ருந்த தமது ஆத­ர­வா­ளர்களை நோக்கி, "உங்­களை ஏமாற்ற மாட்­டோம்," என்று அவர் குரல் எழுப்­பி­னார்.

ஏராளமானோர் திரண்டு வருவார்கள் என எதிர்­பார்க்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து நேற்று காலை முதலே நக­ரம் முழு­வ­தும் நூற்­றுக்­கணக்­கான போலி­சார் குவிக்­கப்­பட்­ட­னர். ஆர்ப்­பாட்­டக் குழு­வி­ன­ருக்கு யாரும் தலைமை ஏற்­க­வில்லை என்­றும் தலைமை இல்­லாத போராட்­டம் என்­றும் இச்­சம்­ப­வத்தை ஊட­கங்­கள் விமர்­சித்­தன.

ஹாங்­காங் அர­சாங்க எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­களை முன்­னு­தா­ர­ண­மாக எடுத்­துக் கொண்டு தாய்­லாந்து மாண­வர்­கள் உள்­ளிட்ட பல­ரும் ஆர்ப்­பாட்­டங்­களை நடத்தி வரு­வ­தா­க­வும் முழுக்க முழுக்க சமூக ஊட­கங்­களை நம்பி அவர்­க­ளின் அர­சாங்க எதிர்ப்பு செயல்­கள் தொட­ரு­வ­தா­க­வும் அவை குறிப்­பிட்­டன.

'சர்­வா­தி­கா­ரத்­துக்கு முடிவு கட்­டுங்­கள்' என்­றும் 'ஆர்ப்­பாட்­டத்­திற்கு உங்­கள் நண்­பர்­க­ளை­யும் அழை­யுங்­கள்' என்­றும் பொருள்­படும் 'ஹேஷ்­டேக்'குகள் நேற்று காலை முதலே டுவிட்­ட­ரில் வேக­மா­கப் பரவி பகிர்ந்­து­கொள்­ளப்­பட்­டன.

கடந்த வாரம் நடை­பெற்ற அரசாங்க எதிர்ப்புப் பேரணியில் 4,000க்கும் மேற்­பட்­ட­வர்­கள் கலந்து­கொண்­ட­னர்.