மணிலா: கொரோனாவால் வீதிக்கு வந்த சிற்றுந்து ஓட்டுநர்கள்

மணிலா: கொரோனாவால் வீதிக்கு வந்த சிற்றுந்து ஓட்டுநர்கள்

1 mins read
92c8fc5c-ac04-4111-a748-ed37e9a89804
வாடகை செலுத்த முடியாததால் வீட்டைவிட்டு வெளியேறி வாகனத்திற்குள் குடியேறிய ஓட்டுநர். படம்: ஏஎஃப்பி -

மணிலா: கொரோனா கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த மாதக்­கணக்­கில் முடக்­க­நிலை நீடிப்ப தால் பிலிப்­பீன்­ஸில் உள்ள ஜீப்னி வாகன ஓட்­டு­நர்­கள் வரு­மா­ன­மின்றி வயிற்­றுப் பிழைப்­புக்­காக பிச்சை எடுக்­கும் நிலை ஏற்­பட்டுள்­ளது. மக்­கள் வீட்­டி­லேயே தங்கி இருக்­கு­மாறு மார்ச் மாதம் அதி­பர் ரோட்­ரிகோ டுட்­டர்டே உத்­த­ர­விட்­ட­தைத் தொடர்ந்து பொதுப் போக்­கு­வ­ரத்­துச் சேவை அடி­யோடு முடங்­கி­யது.

ஜீப்னி எனப்­படும் சிற்­றுந்­துப் பய­ண­மும் நடை­பெ­ற­வில்லை. அத­னால் ஏரா­ள­மான ஜீப்னி ஓட்­டு­நர்­கள் வேலை, வரு­மா­னம் ஆகி­யவை இன்றி சிர­மத்­தில் தவிப்­ப­தாக ஏஎ­ஃப்பி செய்தி குறிப்­பிட்­டது. அவர்­களில் ஒரு­வ­ரான 23 வயது டேனி­யல் ஃப்ளோர்ஸ் தமது முத­லாளி இரக்­கப்­பட்டு கொடுத்து உத­விய ஜீப்னி சிற்­றுந்­தி­லேயே தமது குடும்­பத்தை நடத்தி வரு­கி­றார். அவர் குடி­யி­ருந்து வந்த அடுக்­கு­மாடி வீட்­டுக்­குப் பல மாதங்­க­ளாக வாடகை செலுத்­தா­த­தால் அதை­விட்டு வெளி­யேற வேண்­டிய நிலை அவ­ரது குடும்­பத்­துக்கு ஏற்­பட்­டது.

அதன் பின்­னர் சாலை ஓரத்­தில் நிறுத்தி வைக்­கப்­பட்டு இருக்­கும் தமது வாக­னத்­துக்­குள் குடி­யே­றிய டேனி­யல் குடும்­பத்­தி­னர் சமைப்­பது, தூங்­கு­வது என எல்­லாம் அந்த வாகனத்­துக்­குள்­தான்.

இவ­ரைப்­போன்ற மற்ற ஓட்­டு­நர்­கள் தங்­க­ளது நிலை­மையை விளக்­கும் வாச­கங்­கள் அடங்­கிய அட்­டை­களை கழுத்­தில் தொங்­க­விட்டு சாலை­யில் போவோர் வரு­வோ­ரி­டம் பிச்சை கேட்டு வயிற்­றுப் பசி­யைப் போக்கி வரு­வ­தா­க­வும் ஏஎ­ஃப்பி செய்தி தெரி­வித்­தது. இந்­நி­லை­யில், பிலிப்­பீன்­சில் நேற்று புதி­தாக 3,420 பேருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­ட­தோடு 65 பேர் மாண்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது.