செங்டு: கனமழை காரணமாக தென்மேற்கு சீன மாநிலமான சிச்சுவான் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. 60,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் நேற்று கூறியதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கிய மழை கடுமையாகப் பெய்தது.
மேலும் நேற்று காலை வரை மழை தொடர்ந்ததன் காரணமாக மாநிலத்தில் உள்ள 31 ஆறுகள் அபாயகட்டத்தை எட்டின. இருந்தபோதிலும் யாரும் மரணமடையவோ காணமற்போகவோ இல்லை என்று அதிகாரிகள் கூறினர். சனிக்கிழமை மாலை அந்த மாநிலத்தில் மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது.

