இந்தோனீசியாவில் புதிதாக 2,081 பேருக்கு தொற்று

1 mins read
f5e48e5f-5c05-4625-8f60-34b0ca878eda
இந்தோனீசியாவில் இதுவரை 6,000க்கும் மேற்பட்டோர் கிருமித்தொற்றால் உயிரிழந்து விட்டனர். படம்: இபிஏ -

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் நேற்று புதி­தாக 2,081பேருக்கு கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தாக அந்­நாட்­டின் கொவிட்-19 அர­சாங்­க பணிக்­ குழு தெரி­வித்­தது. மேலும், ஒரே நாளில் 79 பேர் மாண்­டு­விட்­ட­தா­க­வும் அதன் அறிக்கை குறிப்­பிட்­டது. உல­கின் நான்­கா­வது பெரிய மக்­கள்­தொ­கை­ நாடான இந்­தோ­னீ­சி­யா­வில் நேற்­றைய எண்­ணிக்­கை­யை­யும் சேர்த்து 139,549 பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர்.

இதுவரை இந்தோனீசியா வில் 6,000க்கும் மேற்பட்டோர் கிருமித்தொற்றால் உயிரிழந்து விட்டனர்.