கிருமிப் பரவல்: சமய போதகர் மீது தென்கொரியா புகார்

கிருமிப் பரவல்: சமய போதகர் மீது தென்கொரியா புகார்

1 mins read
da4acf19-e9a1-43b0-b61f-9413a86d0051
சோலில் மட்­டும் 146 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. அவர்­களில் 107 பேர் சாரங் ஜீல் எனப்­படும் தேவா­ல­யம் தொடர்­பா­னவை. படம்: ஏஎப்பி -

சோல்: தென்­கொ­ரி­யா­வில் கிரு­மித்­தொற்று எண்­ணிக்கை மீண்­டும் பெரு­கத் தொடங்கி உள்­ளது.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை 103 பேராக இருந்த அந்த எண்­ணிக்கை நேற்று இரு­ம­டங்­கிற்கு மேல் அதி­க­ரித்து 279 ஆகப் பதி­வா­னது.

இவற்­றில் பெரும்­பா­லான தொற்­றுச் சம்­ப­வங்­கள் தலை­ந­கர் சோல் மற்­றும் அத­னைச் சுற்­றி­யுள்ள பகுதி­களில் பதி­வா­னவை. சோலில் மட்­டும் 146 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. அவர்­களில் 107 பேர் சாரங் ஜீல் எனப்­படும் தேவா­ல­யம் தொடர்­பா­னவை.

அந்த தேவா­ல­யத்தை வழி­ந­டத்­தும் ஜன் குவாங்-ஹூன் சர்ச்­சைக்­கு­ரிய சமய போத­கர் என்று கூறப்­படு­கிறது. சுய தனிமை தொடர்­பான விதி­களை அவர் மீறி­ய­தா­க­வும் கிருமிப் பர­வல் தொடர்­பான விசா­ர­ணையை நடத்த விடா­மல் தடுப்­ப­தா­க­வும் அவர் மீது அர­சாங்­கம் குற்­றம் சாட்டி வரு­கிறது. சுய தனிமை உத்­த­ர­வைப் பொருட்­ப­டுத்­தா­மல் நேற்று முன்­தி­னம் பேரணி ஒன்­றில் பங்­கேற்­ற­தால் அவர் மீது போலி­சில் புகார் பதிவு செய்­யப்­படும் என்று தென்­கொ­ரிய சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

தேவா­லய நிகழ்ச்­சி­களில் எத்­தனை பேர் பங்­கேற்­றார்­கள், அவர்­களில் யார் யாருக்கு கிரு­மிப் பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது, அவர்­களின் தொடர்பு தடங்­கள் என்ன என்­பன போன்ற விவ­ரங்­களை திரு ஜன் தெரி­விக்க மறுப்­ப­தா­க­வும் அமைச்சு குறிப்­பிட்­டது.