ரஷ்யாவைச் சேர்ந்த கட்டுடற் கலைஞர் சுமார் 400 கிலோகிராம் எடையைத் தூக்கும் முயற்சியில் தமது முட்டி எலும்புகளை முறித்துக்கொண்டுள்ளார்.
மாஸ்கோவில் நடைபெறவிருக்கும் அனைத்துலக பளு தூக்கும் போட்டியின் பங்கேற்பாளரான அலெக்சாண்டர் செடைக், போட்டியின்போது அந்த எடையைத் தாங்க முடியாமல் அந்தச் சுமையுடன் தரையில் விழுந்ததை காணொளி ஒன்று காட்டுகிறது. பொத்தென்று தரையில் விழுந்த திரு செடைக் வலியால் கதறினார்.
உடனே மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட அவருக்கு 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. திரு செடைக் வயது என்ன என்பது தெரியவில்லை.
இரண்டு மாதங்களுக்கு அவர் நடமாட முடியாது என்று கூறப்படுகிறது.

