செப்டம்பர் 29ல் சாபா தேர்தல்

1 mins read
2031a078-0d9d-4abe-a1b3-e36227d88acd
மலேசிய தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் அஸ்மி ‌ஷரோம் செய்தியாளர்களிடம் தேர்தல் குறித்த தகவலைத் தெரிவிக்கிறார். படம்: ஹரி அங்காரா -

கோத்தா கினபாலு: சாபா சட்டமன்றத் தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி நடைபெறும் என்று மலேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 73 தொகுதிகளுக்கான வேட்பு மனுத் தாக்கல் செப்டம்பர் 12ஆம் தேதி செய்யப்பட வேண் டும் என்று தேர்தல் ஆணையத் தின் துணைத் தலைவர் அஸ்மி ஷரோம் நேற்று தெரிவித்தார்.

இதற்கிடையே, சாபா சட்டமன்றக் கலைப்புக்கு எதிராக மூசா அமான் தொடுத்த வழக் கில் நீதிமன்றம் ஆகஸ்ட் 21ஆம் தேதி முடிவு செய்யவுள்ளது.