கெடாவில் கடுமையான கட்டுப்பாடுகள்

கெடாவில் கடுமையான கட்டுப்பாடுகள்

1 mins read
eec40ca2-0de1-4427-bc8d-f27ef37a1662
மலேசியாவின் பினாங்கு நகரில் உள்ள ஒரு ஈரச்சந்தைக்குள் நுழையும் வாடிக்கையாளர்களின் உடல்வெப்பத்தைச் சரிபார்க்கின்றனர் அதிகாரிகள். படம்: ஏஎப்பி -

அலோர் ஸ்டார்: கெடாவில் கிருமித் தொற்று சம்பவங்கள் கண்டறியப்பட்ட பகுதிகளில் மாநில அரசு கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி உள்ளது.

தாவார், பாலிங், கோலா முடா, சாலா மற்றும் யானில் உள்ள பல இடங்களில் உணவகங்களில் உணவருந்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் முகமது சனுசி முகமது நூர் கூறினார்.

இரவு சந்தைகள் செயல்படும் நேரம் குறைக்கப்படுவதாகவும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட அனு

மதிக்கப்படும் என்றும் சனுசி கூறினார்.

பொது பூங்காக்களும் மூடப்படும். திருமணங்கள் உள்ளிட்ட எந்தவிதமான கொண்டாட்ட விழாக்களுக்கும் அனுமதி கிடையாது.

இந்த கட்டுப்பாடுகள் கிருமித்தொற்று பதிவான இடங்களில் உடனடியாக நடப்புக்கு வருவதாகவும் அவர் சொன்னார்.

இதற்கிடையே மலேசியாவில் நேற்று புதிதாக 12 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் ஆறு கெடாவில் பதிவானவை.