கமலா ஹாரிஸின் செய்தித் தொடர்பாளராக இந்திய வம்சாவளி பெண்

கமலா ஹாரிஸின் செய்தித் தொடர்பாளராக இந்திய வம்சாவளி பெண்

1 mins read
b49e9c6e-edbe-4ff1-a34a-bf98b6105d71
அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ். படம்: ராய்ட்டர்ஸ் -

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் தனது செய்தித் தொடர்பாளராக இந்திய-அமெரிக்கா பெண்ணான சபரினா சிங் என்பவரை நியமித்துள்ளார்.

32 வயதான சபரினா சிங், இதற்கு முன் நியூ ஜெர்சி செனட்டர் கோரி புக்கர் மற்றும் முன்னாள் நியூயார்க் மேயர் மைக் ப்ளூம்பெர்க் ஆகிய இரண்டு அதிபர் வேட்பாளர்களுக்குச் செய்தித் தொடர்பாளராக இருந்துள்ளார்.

கமலா ஹாரிசுடன் பணியாற்றுவதை தாம் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்பதாகவும் தேர்தலில் வெற்றி பெற காத்திருப்பதாகவும் சபரினா சிங் சொன்னார்.

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான

77 வயது ஜோ பைடன் சென்ற வாரம் 55 வயது கமலா ஹாரிசைத் தேர்ந்தெடுப்பதாக அறிவித்தார். அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள முதல் கறுப்பின பெண், முதல் ஆசிய அமெரிக்க பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கமலா ஹாரிசின் தாயார் சென்னையையும் தந்தை ஜமைக்காவை

யும் சேர்ந்தவர்களாவர். ஜனநாயகக் கட்சியின் வளரும் நட்சத்திரமாக அறியப்பட்டுள்ளார் கமலா ஹாரிஸ்.