திருமதி ஒபாமா: நாட்டின் தவறான அதிபர் டிரம்ப்

திருமதி ஒபாமா: நாட்டின் தவறான அதிபர் டிரம்ப்

1 mins read
b9c7725a-1ee7-48ab-a961-684ea79e23b6
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிஷல் ஒபாமா, அதிபர் டோனல்ட் டிரம்ப் நாட்டின் தவறான அதிபர் என்று சாடி உள்ளார். படம்: DEMOCRATIC NATIONAL CONVENTION -

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிஷல் ஒபாமா, அதிபர் டோனல்ட் டிரம்ப் நாட்டின் தவறான அதிபர் என்று சாடி உள்ளார்.

ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளரான திரு ஜோ பைடனுக்கு ஆதரவுக் குரல் தெரிவித்த திருமதி ஒபாமா, நவம்பரில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் திரு பைடனுக்கு வாக்களிக்குமாறு அமெரிக்கர்களைக் கேட்டுக்கொண்டார்.

டிரம்ப் நிர்வாகம் ஏற்படுத்தியுள்ள பெருங்குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவர இதுவே ஒரே வழி என்றார் அவர்.

"தலைமைத்துவம், ஆறுதல், நிலைமாறாத்தன்மை போன்றவற்றுக்காக வெள்ளை மாளிகையை அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் கூச்சல், குழப்பம், பிரிவினை, இரக்கமின்மை ஆகியவையே ஏற்படுகிறது," என்று கூறிய திருமதி ஒபாமா, சிரமமான சூழ்நிலையிலிருந்து நாட்டை மீட்க அதிபர் டிரம்ப்பால் முடியவில்லை என்று சொன்னார்.

"டிரம்ப் ஏற்படுத்தியுள்ள வெறுப்புணர்வையும் பிரிவினைவாதத்தையும் ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார். குடியேறிகளுக்கு எதிராக காட்டப்படும் பாகுபாட்டை அவர் நிறுத்துவார்," என்றார் திருமதி ஒபாமா.

குறிப்புச் சொற்கள்