லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உலகிலேயே மிக அதிகமான வெப்பநிலை கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவானது.
இதன் காரணமாக காற்று மற்றும் தொடர் மின்னல்கள் ஏற்பட்டன. இதையடுத்து ஏராளமான காட்டுத்தீ ஏற்படலாம் என வானிலை மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை மதிய நிலவரப்படி, முந்திய 24 மணி
நேரத்தில் 6,000 முறை தொடர்ச்சியாக மின்னல்கள் தாக்கின.
இதனால் சான் பிரான்சிஸ்கோ பேயின் வடக்கு பகுதியிலிருந்து கலிஃபோர்னியாவின் கோல்ட் கன்ட்ரி வரை 200க்கும் மேற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டன.
மேலும் புகழ்பெற்ற ஏரி தஹோ ரிசார்ட் நகரத்தின் வடக்கே 17,806 ஹெக்டேர் பரப்பளவு நிலப்பகுதிகள் தீச்சம்பவங்கள் பதிவாகின.
இதையடுத்து கலிஃபோர்னியா மாநிலம் முழுவதும் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டு
உள்ளது.

