கோலாலம்பூர்: வெளிநாட்டிற்குச் சென்று திரும்பிய மலேசிய அமைச்சர் ஒருவர் கட்டாய தனிமைப்படுத்தல் உத்தரவைக் கடைப்பிடிக்கத் தவறியதால், சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
துருக்கி சென்றுவிட்டு ஜூலை 7ஆம் தேதி நாடு திரும்பிய மலேசியாவின் தோட்டம், கைத்தொழில், பொருட்கள் துறை அமைச்சரும் பாஸ் கட்சி உறுப்பினருமான கைருதீன் அமன் ரசாலி, ஜூலை 13ஆம் தேதி நாடாளுமன்றத்திற்குச் சென்றது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர் தெரேசா கோக் கேள்வி எழுப்பினார்.
நாடு திரும்பியவுடன் பரிசோதனையில் தொற்று இல்லை என்று தெரிய வந்த சிலருக்குப் பின்னர் தொற்று உறுதி செய்யப்பட்டதைச் சுட்டிய அவர், எனவே 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் உத்தரவு அமைச்சர் உட்பட அனை
வராலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றார்.
"எனவே கொவிட்-19 குற்றங்களுக்கு எதிராக தேசிய பாதுகாப்பு மன்றம் இரட்டை நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை என்பதை நிரூபிக்க நீதிமன்றம் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையே, தனிமைப்படுத்தல் உத்தரவில் இருந்த 81 வயது ஆடவர் ஒருவர் இருமிக் கொண்டே புகார் அளிப்பதற்காக செந்தூல் மாவட்ட காவல் நிலையத்திற்குச் சென்றதையடுத்து காவல்நிலையத்தின் ஒரு பகுதி மூடப்பட்டது. கிருமி
நாசினி தெளிக்கும் பணிக்குப் பிறகு நேற்று மாலை 4 மணிக்கு காவல்நிலையம் வழக்கம் போல் இயங்கவிருந்ததாகக் கூறப்பட்டது.

