கிருமித்தொற்று: கண்காணிப்பை பலப்படுத்தும் நியூசிலாந்து

1 mins read
027c1fba-12ba-4361-bf8f-b373af92f208
கொரோனா தொற்­றுக்கு எதி­ரான போரில் ஏற்கெனவே 1,200 ராணு­வத்­தி­னர் ஈடு­பட்­டுள்­ள நிலையில், தற்போது மேலும் 500 ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். படம்: ஏஎப்பி -

வெலிங்­டன்: கிரு­மிப் பர­வலை மேலும் கட்­டுப்­ப­டுத்­தும் வித­மாகத் தனி­மைப்­ப­டுத்­தல் மையங்கள் மற்­றும் எல்­லை­ப் பகுதிகளில் ராணு­வத்­தினரை மேலும் அதி­க­ரிக்­கப் போவ­தாக நியூ­சி­லாந்து தெரி­வித்­துள்­ளது.

கொரோனா தொற்­றுக்கு எதி­ரான போரில் ஏற்கெனவே 1,200 ராணு­வத்­தி­னர் ஈடு­பட்­டுள்­ள நிலையில், தற்போது மேலும் 500 ராணுவத்தினர் ஈடுபடவுள்ளனர்.

மக்கள் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய இவர்கள் உதவுவார்கள்.

நேற்று நியூ­சி­லாந்­தில் ஐந்து கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் மட்­டுமே பதி­வா­கின. இந்த எண்­ணிக்கை நேற்று முன்­தி­னம் 13ஆக இருந்­தது.

கிருமித்தொற்றின் இரண்டாவது அலை தலைதூக்கியதையடுத்து, அங்குப் பொதுத்தேர்தல் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.