மணிலா: ஆஸ்திரேலியாவில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டதையடுத்து, அங்கிருந்து பறவைகள் மற்றும் அவை சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்ய பிலிப்பீன்ஸ் தடை விதித்துள்ளது.
விக்டோரியாவில் உள்ள முட்டை பண்ணை ஒன்றில் ஏவியன் எனப்படும் H7N7 பறவை காய்ச்சல் கிருமி இருப்பது கண்டறியப்பட்டதாக ஆஸ்திரேலியா தெரிவித்தது.
இந்த கிருமித்தொற்று விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய சாத்தியம் உள்ளது என்றாலும் மனிதரிடமிருந்து மனிதருக்குப் பரவுவதற்கான ஆதாரம் குறைவாக உள்ளது என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.

