கமலா ஹாரிஸ்: அதிபராக டிரம்ப் தோல்வி அடைந்துவிட்டார்

கமலா ஹாரிஸ்: அதிபராக டிரம்ப் தோல்வி அடைந்துவிட்டார்

1 mins read
56bd046c-26ab-42e4-ab08-f4519536ad33
-

ஒரு அதிபராக டிரம்ப் முழுத் தோல்வி அடைந்துவிட்டதாகவும் அவரது இந்தத் தோல்வி அவரை மட்டுமல்ல, இந்த தேசத்தையும் மக்களையும் தோல்வியில் தள்ளிவிட்டது என்று கடும் குற்றச்சாட்டை முன் வைத்து தனது பிரசாரத்தைத் துவக்கியுள்ளார் ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் கமலா ஹாரிஸ்.

துணை அதிபர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதற்குப் பிறகு பேசிய அவர் டிரம்பைக் கடுமையாகச் சாடி பேசினார்.

"மக்களுக்கு ஏற்பட்ட எல்லா துயரத்தையும் தனக்கான அரசியல் ஆயுதமாக மாற்றி விட்டார் டிரம்ப். அமெரிக்கர்கள் இதை உணர வேண்டும். ஜோ பைடனை அதிபராகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவரால் மட்டுமே மக்களை மீண்டும் ஒருங்கிணைக்க முடியும்," என்றும் கமலா ஹாரிஸ் கூறினார்.

இதற்கிடையே, அதிபராக இருப்பதற்கு டிரம்ப் முற்றிலும் தகுதியற்றவர் என்று கூறினார் முன்னாள் அதிபர் ஒபாமா. எனவே அமெரிக்காவில் ஜனநாயகத்தைக் கட்டிக்காக்க பைடனைத் தேர்ந்தெடுப்பது அவசியம் என்றும் அவர் சொன்னார்.