தோக்கியோவில் 'வெளிப்படையான' பொது கழிவறை அறிமுகம்

தோக்கியோவில் 'வெளிப்படையான' பொது கழிவறை அறிமுகம்

1 mins read
bc4888e3-cab6-42a1-81dd-7ce08f2ff282
கழிவறைக்குள் ஆள் சென்றவுடன் அதன் 'வெளிப்படைத்தன்மை' தானாகவே மறைப்பு சுவராக மாறிவிடும். படம்: நியூயார்க் டைம்ஸ் -

தோக்­கியோ: பொது இடங்­களில் கழிப்­ப­றை­க­ளைப் பயன்­ப­டுத்­தும் மக்­கள் அவை தூய்­மை­யாக இருக்­கி­றதா, யாரே­னும் உள்ளே பயன்­ப­டுத்­திக் கொண்­டி­ருக்­கி­றார்­களா என்­பதைக் கண்­ட­றிய புது­மை­யான கழிப்­ப­றை­க­ள அறி­

மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது ஜப்­பான்.

அதன் தலை­ந­கர் தோக்­கி­யோ­வில் வண்­ண­ம­ய­மான வெளிப்­ப­டை­யான கழி­வ­றை­கள் பொது இடங்­களில் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அதா­வது வெளியே இருந்து பார்த்­தால் கழி­வ­றைக்­குள் இருப்­பது அப்­ப­டியே தெரி­யும்.

ஆனால் கழி­வ­றை­யை யாரும் பயன்­ப­டுத்­தாத போதுதான் அப்படி பார்க்க முடி­யும்.

இதன் முக்­கி­ய­மான அம்­சமே, யாரே­னும் கழி­வ­றைக்­குள் சென்று பூட்­டி­விட்­டால் வெளியே இருப்­ப­வர்­க­ளால் உள்ளே இருப்­ப­வர்­க­ளைப் பார்க்க முடி­யாது. இருட்­டாக தெரி­யும். இதை வைத்தே உள்ளே கழிப்­ப­றையை யாரோ பயன்­ப­டுத்­து­கி­றார்­கள் என்­பதைத் தெரிந்து கொள்­ள­லாம்.

நிப்­போன் அறக்கட்டளை தொடங்கிய இத்திட்டத்திற்காக கட்­ட­டக் கலை­ஞர் ஷிகேரு பான் என்­ப­வர் இக்கழிவறையை வடி­

வ­மைத்துள்ளார்.