லிபியாவில் இருந்து மத்திய தரைக்கடல் வழியே புலம்பெயர முயன்றவர்களின் படகு விபத்துக்குள்ளானதில் 5 குழந்தைகள் உள்பட 45 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
செனகல், மாலி, சாட், கானா உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்தோர், கடல் வழியே இத்தாலிக்குப் புலம்பெயர முயன்றபோது சுவாரா கடற்கரை அருகே அவர்கள் சென்ற படகின் இயந்திரம் வெடித்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் மாண்டனர். இதில் 37 பேர் லிபிய னவர்களால் மீட்கப்பட்டனர் ஐநா கூறியுள்ளது. அந்தப் படகில் குறைந்தது 82 பேராவது பயணம் செய்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 7,000 குடியேறிகள் படகுகள் மூலம் ஆபத்தமான பயணம் மேற்கொண்டு லிபியாவுக்கு வந்துள்ளனர். 302 பேர் கடலில் மூழ்கி மாண்டுள்ளனர் என்கிறது ஐ.நா.

