ஹாங்காங்கில் பெரிய அளவில் குடியிருப்பாளர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை

ஹாங்காங்கில் பெரிய அளவில் குடியிருப்பாளர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை

1 mins read
9972ab35-d2ab-4251-b011-984f9450620c
-

அடுத்த மாதம் 1ஆம் தேதியில் இருந்து பெரிய அளவில் குடியிருப்பாளர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும் என்று ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் தெரிவித்துள்ளார்.

சீனச் சுகாதார அதிகாரிகள் 60 பேரின் துணையுடன் அப்பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளன. சீனாவின் சிறப்பு நிர்வாக வட்டாரமான ஹாங்காங்கில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு சீனச் சுகாதாரத் துறையினர் உதவுவது இதுவே முதன்முறை.

விருப்பமுள்ளவர்கள் கிருமித் தொற்று பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றும் கிட்டத்தட்ட இரு வார காலத்தில் அந்த நடவடிக்கை நிறைவுபெறும் என்றும் திருவாட்டி லாம் கூறியிருக்கிறார்.

கடந்த ஜூலை மாதத்தில் இருந்து ஹாங்காங்கில் சமூகப் பரவல் மூலம் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியது. ஆனாலும், அண்மைய வாரங்களில் நாளொன்றுக்கு கிருமி தொற்றுவோர் எண்ணிக்கை மூவிலக்கத்தில் இருந்து ஈரிலக்கத்திற்குக் குறைந்துள்ளது.

ஆயினும், புதிதாக கொரோனா தொற்றுவது தொடர்ந்து குறைந்து வந்தாலும் மக்கள் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது என்று திருவாட்டி லாம் எச்சரித்துள்ளார்.

இதுவரை அங்கு 4,600க்கும் மேற்பட்டோரை கொரோனா தொற்றியது. அவர்களில் 75 பேர் மாண்டுவிட்டனர்.

மாலை 6 மணிக்கு மேல் உணவகங்களில் உண்ணத் தடை, வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிவது போன்ற கட்டுப்பாடுகள் இம்மாதம் 25ஆம் தேதி வரையிலேனும் நீடிக்கும் எனக் கூறப்படுகிறது.