தாய்லாந்தில் அடுத்தகட்ட பரவல் அச்சம்

தாய்லாந்தில் அடுத்தகட்ட பரவல் அச்சம்

1 mins read
3e9c8321-cd8e-4312-8ac0-2762625ba68a
தாய்லாந்தில் இதுவரை 3,390 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. வெளி நாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. படம்: இபிஏ -

பேங்­காக்: இரண்­டாம் கட்ட கிரு­மிப் பர­வலை தடுக்­கும் நோக்­கில் தாய்­லாந்து அதன் தற்­போ­தைய அவ­ச­ர­நி­லையை மேலும் ஒரு மாதத்­திற்கு நீட்­டிக்க முடிவு செய்­துள்­ளது.

மூன்று மாத கால­மாக உள்­ளூர்­வா­சி­க­ளி­டம் கிரு­மித்­தொற்று காணப்­ப­டா­த­போ­தி­லும் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக செப்­டம்­பர் இறுதி வரை அவ­ச­ர­நி­லையை தாய்­லாந்து நீட்­டிக்க உள்­ளது. அவ்­வாறு நீட்­டிக்­கப்­பட்­டால் மார்ச் மாதத்­திற்­குப் பிந்­திய ஐந்­தா­வது நீட்­டிப்­பாக அது இருக்­கும்.

கொவிட்-19 நிலைமை நிர்வகிப்பு நிலையத்தில் வெளியுறவு அமைச்சின் துணை பேச்சாளர் நட்டன்பனு நோபாகுன் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.

"தற்போது வர்த்தகங்கள் பழையபடி திரும்பி நமது நடவடிக்கைகள் மீண்டு வழக்கமான கட்டத் தில் இருக்கிறோம்.

"இரண்டாம் கட்டமாக கிருமிப் பரவல் ஏற்பட்டால் அதனை நம்மால் தாங்க இயலாது," என்றார் அவர். தாய்லாந்தில் இதுவரை 3,390 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. வெளி நாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.

இருப்பினும், நியூசிலாந்து போன்ற நாடுகளில் ஏற்பட்டதைப்போல கிருமித்தொற்று மீண்டும் ஏற்படாதிருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தாய்லாந்து அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அதேநேரம், ஆசியானின் இரண்டாவது பெரிய பொருளியல் நாடான தாய்லாந்து 12.2 விழுக்காடு சுருங்கிய பொருளியலையும் சீர்ப்படுத்த வேண்டி உள்ளது. அதன் காரணமாக அடுத்த மாதம் உள்ளூர் காற்பந்து லீக் ஆட்டங்களை நடத்த அரசாங்கம் அனுமதி அளிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.