தோக்கியோ: வெளிநாட்டிலிருந்து வரும் ஜப்பானியர்கள் கொரோனா கிருமிப் பரிசோதனையை செய்துகொள்வதோடு 14 நாள் தனிமை உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்பது தற்போதைய ஏற்பாடு. இதேபோன்ற கட்டுப்பாடுகளை உள்ளூர் விசா வைத்திருக்கும் வெளி நாட்டினருக்கும் விதிக்க ஜப்பான் திட்டமிடுகிறது. இதன் மூலம் அடுத்த மாதம் முதல் ஜப்பானிய நிரந்தரவாசிகளுக்கும் பரிமாற்ற மாணவர்களுக்கும் இருக்கும்
கட்டுப்பாடுகள் தளரும். நடப்பில் உள்ள கட்டுப்பாடுகள் பொருளியலையும் வாழ்க்கை முறையையும் கடுமையாகப் பாதிப்பதாக எழுந்துள்ள கூக்குரலைத் தொடர்ந்து தளர்வுகளை அறிமுகப்படுத்த ஜப்பான் முடிவு செய்துள்ளதாக அரசு ஒளிபரப்பு நிறுவனமான என்எச்கே தெரிவித்துள்ளது.

