மெல்பர்ன்: ஐந்து வாரங்களில் ஆகக் குறைவான கிருமித்தொற்று ஆஸ்திரேலியாவில் பதிவாகி உள்ளது. கிருமிப்பெருக்க மாநிலமான விக்டோரியாவில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத் தில் 179 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதற்கு முதல் நாள் அந்த எண்ணிக்கை 240 பேராக இருந்தது. மேலும் இரு வாரங்களுக்கு முன்னர் தினமும் 700 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலை யில் தற்போது அந்த எண்ணிக்கை குறைந்து நல்ல முன்னேற்றம் அங்கு ஏற்பட்டுள்ளது. அதனைப் பெருமையுடன் குறிப்பிட்ட பிரதமர் ஸ்காட் மோரிசன், "இது நம்பிக்கை மிகுந்த வாரம்," என்றார்.
ஆஸ்திரேலியா: ஐந்து வாரங்களில் ஆகக்குறைவான நோய்த்தொற்று
1 mins read
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம் எல்லைகளை மீண்டும் திறப்பது குறித்து பரிசீலனை செய்து வருகிறது. படம்: ஏஎப்பி -

