ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பண்டா கடற்பகுதி அருகே நேற்றுக் காலை 6.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு நிலையம் தெரிவித்தது.
கடல் ஆழத்தில் 640 கிலோ மீட்டர் வரை நிலநடுக்கம் ஏற்பட்ட தாகத் தெரிவித்த அந்த அமைப்பு, இருப்பினும் இந்திய பெருங்கடல் வட்டாரத்தில் சுனாமியை உருவாக்கும் அளவுக்கு ஆற்றல் கொண்டதாக இந்த நிலநடுக்கம் இல்லை என்றது.

