சுடச் சுடச் செய்திகள்

10 ஆண்டுகளாக பாலியல் வல்லுறவு, கொடூரக் கொலைகள் புரிந்த அமெரிக்க முன்னாள் போலிஸ்காரருக்கு ஆயுள் தண்டனை

அமெரிக்காவின் முன்னாள் போலிஸ்காரரான 74 வயது ஜேசஃப் ஜேம்ஸ் டிஏஞ்செலோ ஜூனியர், 13 கொடூரக் கொலைகள், 10க்கு மேற்பட்ட கற்பழிப்புகளை ஒப்புக்கொண்டதையடுத்து, சேக்ரமென்டோ நீதிமன்றம், அதிகபட்ச தண்டனையான ஆயுள் தண்டனையை டிஏஞ்செலோவுக்கு விதித்தது; பரோலில்கூட வெளியில் வரமுடியாது. 

1970, 80களில் டிஏஞ்செலோ செய்த  இந்தக் குற்றங்கள் கலிஃபோர்னியாவையே அச்சுறுத்துவதாக இருந்தது.

தன்மீதான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது அவற்றை ஒப்புக்கொண்டதுடன், தன்னால் துன்புறுத்தப்பட்டவர்களிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டான் டிஏஞ்செலோ.

மூன்று மகள்கள், பேரப்பிள்ளைகள் உடைய டிஏஞ்செலோ, 2018ஆம் ஆண்டுவரை கைது செய்யப்படவில்லை.

குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்த இடங்களில் சேகரிக்கப்பட்ட மரபணு சோதனைகளில் டிஏஞ்செலோதான் குற்றவாளி என்பதை அறிந்த பிறகுதான் டிஏஞ்செலோவை போலிசார் கைது செய்தனர்.

டிஏஞ்செலோவுக்கு கருணை காட்டக்கூடாது, என பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்டதாக நீதிபதி சொன்னபோது நீதிமன்றத்தில் கைதட்டல் விண்ணைப் பிளந்தது.

1975ல் மத்திய கலிஃபோர்னியாவில் தொடங்கிய டிஏஞ்செலாவின் கற்பழிப்பு, கொலை குற்றச் செயல்கள் கலிஃபோர்னியா முழுவதும் பரவின. 1986ல் 18 வயது பெண் கற்பழித்து கொல்லப்பட்டதுதான் டிஏஞ்செலோவின் கடைசி குற்றச்செயல்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon