விக்டோரியாவில் 24 மணி நேரத்தில் 13 பேர் மரணம்

விக்டோரியாவில் 24 மணி நேரத்தில் 13 பேர் மரணம்

1 mins read
82b8f655-2f6d-438a-b885-3ec8676f5b92
ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலம்தான் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. விக்டோரியா மாநிலத்தின் மெல்பர்ன் நகரத்தில் உள்ள அருங்காட்சியகக் கட்டத்தின் வெளியே ராணுவத்தினரும் காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். படம்: இபிஏ -

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கிருமிப்பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இருந்தாலும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13 பேர் கிருமித்தொற்றுக்கு பலியாகிவிட்டனர் என்று அம்மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

விக்டோரியாவில் தொடர்ந்து 2வது நாளாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200க்கும் குறைவாகவே இருந்து வருகிறது.

ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலம்தான் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. 2வது கிருமிப்பரவல் அலை காரணமாக ஆஸ்திரேலிய முழுவதும் தொற்று பரவி வருகிறது.

இருந்தாலும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியாவில் தொற்று எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. இதுவரை 24,500 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 485 பேர் தொற்றுக்கு பலியாகிவிட்டனர்.

கடந்த இரண்டு நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200க்கும் கீழ் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சந்தேகமின்றி இந்தப் போக்கு தொடரும் என்று விக்டோரியாவின் தலைமை சுகாதார அதிகாரி டாக்டர் பிரட் சட்டன் நம்பிக்கை தெரிவித் தார்.

"3வது அலையிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைய வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலியாவில் கிருமித் தொற்றால் பாதிக்கப்படும் நால்வரில் ஒருவர் விக்டோரியா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த வெள்ளிக்கிழமை அன்று 179 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டனர். ஒன்பது பேர் மாண்டனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த எண்ணிக்கை 700ஆக இருந்தது.