கிருமித்தொற்று மோசமடைவதைத் தவிர்க்க போராடும் தென்கொரியா

2 mins read
b72523d5-c3b1-4155-b830-67b736185638
தென்கொரியத் தலைநகர் சோலில் பொது இடங்­களில் முகக்­க­வ­சம் அணி­வது முதன்­மு­றை­யாக கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது. படம்: ஏஎப்பி -

சோல்: தென்­கொ­ரி­யா­வில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்து கொண்­டே­யி­ருப்­ப­தால், அதன் தலை­ந­க­ர­மான சோலில் பொது இடங்­களில் முகக்­க­வ­சம் அணி­வது முதன்­மு­றை­யாக கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது.

முன்­ன­தாக சென்ற மே மாதம் பொது போக்­கு­வ­ரத்து மற்­றும் டாக்­சி­களில் செல்லும்போது மட்­டும் முகக்­க­வ­சம் கட்­டா­யம் அணிய வேண்­டும் என்று தென்­கொ­ரிய அர­சாங்­கம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

ஆனால் அண்­மைய வாரங்­க­ளாக தென்­கொ­ரி­யா­வில் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பெரு­கு­வ­தால், நாட்­டில் உயர்­மட்ட சமூக பாது­காப்பு இடை­வெளி உத்­த­ரவை நடை

முறைப்­ப­டுத்த வேண்­டி­யி­ருக்­க­லாம் என்று சுகா­தார அதி­கா­ரி­கள் கவலை தெரி­வித்­துள்­ள­னர்.

கிரு­மிப் பர­வல் இதோடு முடிவு பெற­வில்லை என்­றால், மூன்­றாம் கட்ட கட்டுப்பாடாக சமூக பாது­காப்பு இடை­வெ­ளியை நடை­

மு­றைப்­ப­டுத்­து­வ­தைத் தவிர வேறு எந்த வழி­யும் இல்லை," என்று தென்­கொ­ரிய அதி­பர் மூன் ஜே-இன் தனது உயர்­மட்ட உத­வி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

மூன்­றாம் கட்ட கட்­டுப்­பாடு நடை­மு­றைக்கு வந்­தால், ஆசி­யா­வின் நான்­கா­வது பெரிய பொரு­ளி­யல் நாடான தென்­கொ­ரி­யா­வில் பள்­ளி­கள் மற்­றும் வர்த்­த­கங்­கள் மூடப்­படும் நிலை ஏற்­படும்.

ஞாயிற்­றுக்­கி­ழமை நில­வ­ரப்­படி தென்­கொ­ரி­யா­வில் 266 புதிய சம்­ப­வங்­கள் பதி­வா­கின. இது முந்­திய நாள் எண்­ணிக்­கை­யான 397ஐ விட குறைவு என்­றா­லும் ஒரு வாரத்­திற்­கும் மேலாக தின­சரி பாதிக்­கப்

­ப­டு­வோர் எண்­ணிக்கை மூன்று இலக்­கங்­க­ளி­லேயே தொடர்­வது குறிப்­பி­டத்­தக்­கது.

கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தன் முக்­கி­ய­மான ஒன்­றான, தொடர்பு தட­ம­றி­த­லில் தென்­கொ­ரியா சிறப்­பாக செயல்­ப­டு­வ­தாக பர­வ­லாக பாராட்­டப்­பட்­டது. ஆனால் பாதிக்­கப்­பட்­டோ­ரில் சுமார் 20 விழுக்­காட்­டி­ன­ரின் தொடர்­பு­களை தட­ம­றிய முடி­ய­வில்லை என்று சுகா­தார அமைச்­சின் அதி­கா­ரி­யான யூன் டே-ஹோ சொன்­னார்.

"இந்த வாரம் நாம் கிரு­மித்­தொற்­றின் 'கிராப்' எனும் வரை­ப­ட­நி­ரல் வளைவை தட்­டை­யாக்க தவ­றி­விட்­டால், நாடு முழு­வ­தும் கிரு­மித்­தொற்று பர­வக்­கூ­டிய நெருக்­க­டியை எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருக்­கும்," என்று யூன் கூறி­னார்.

தென்கொரியாவில் பதிவான அண்மைய சம்பவங்களில் 875 பேர் சோல் தேவாலயத்தோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளனர்.