அமெரிக்காவில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி

அமெரிக்காவில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி

1 mins read
aa4608a7-bdae-48a3-b419-0627ee0ed8b0
அர­சி­யல் கார­ணங்­க­ளுக்­காக தடுப்­பூ­சி­கள் மற்­றும் சிகிச்சை முறை­களை வெளி­யி­டு­வ­தற்கு மருந்து அமைப்பு தடை­யாக இருப்­ப­தாக இரண்டு நாட்­க­ளுக்கு முன் சாடிய அமெரிக்க அதிபர் டிரம்ப், பிளாஸ்மா சிகிச்­சைக்கு அனு­மதி அளித்­த­தற்­காக நேற்று பாராட்­டி­னார். படம்: இபிஏ -

வாஷிங்­டன்: கொரோனா நோயா­ளி­க­ளுக்­கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க அமெ­ரிக்க உணவு மற்­றும் மருந்துக் கட்­டுப்­பாட்டு அமைப்பு அனு­மதி வழங்­கி­யுள்­ள­தாக அதன் அதி­பர் டிரம்ப் தெரி­வித்­தார்.

இது பற்­றிய அறி­விப்பை வெளி­யிட்ட அவர், "பிளாஸ்மா சிகிச்­சைக்கு உணவு மற்­றும் மருந்துக் கட்­டுப்­பாட்டு அமைப்பு அனு­மதி வழங்­கி­யுள்­ளது. கொரேனா கிரு­மிக்கு எதி­ரான போராட்­டத்­தில் நான் நீண்ட நாட்­க­ளாக எதிர்­பார்த்த வர­லாற்று முக்­கி­யத்­து­வம் வாய்ந்த அறி­விப்பு இது," என்­றார்.

அர­சி­யல் கார­ணங்­க­ளுக்­காக தடுப்­பூ­சி­கள் மற்­றும் சிகிச்சை முறை­களை வெளி­யி­டு­வ­தற்கு மருந்து அமைப்பு தடை­யாக இருப்­ப­தாக இரண்டு நாட்­க­ளுக்கு முன் சாடிய டிரம்ப், பிளாஸ்மா சிகிச்­சைக்கு அனு­மதி அளித்­த­தற்­காக நேற்று பாராட்­டி­னார்.

தனது இந்த முடிவு குறித்து ஆதா­ரங்­களை மேற்­கோள்­காட்­டி­வி­ளக்­கம் அளித்­துள்ள அமைப்பு, பிளாஸ்மா சிகிச்சை உயி­ரி­ழப்பு விகி­தத்­தைக் குறைக்­கும் என்­றும் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்ட முதல் மூன்று நாட்­க­ளுக்­குள் பிளாஸ்மா சிகிக்சை அளிக்­கப்­பட்­டால், அது நோயா­ளி­யின் உடல்­நி­லை­யில் குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­தும் என்­றது.

பிளாஸ்மா சிகிச்சை அளிக்­கப்­பட்ட சுமார் 20,000 நோயா­ளி­க­ளி­டம் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வில் இந்த முறை பாது­காப்­பா­னது என்று தீர்­மா­னித்­த­தா­க­வும் அது கூறி­யது.

இந்­நி­லை­யில், அதி­பர் தேர்­த­லில் கொரோ­னா­வுக்கு மருந்து கண்­டு­பி­டிக்­கப்­பட்­டு­விட்­டது என்ற அறி­விப்­பு­தான் தனக்கு வாக்­கு­க­ளைப் பெற்­றுத் தரும் என டிரம்ப் நம்­பு­வ­தா­கக் கூறப்­ப­டு­கின்­றது.