வெலிங்டன்: நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் இவ்வார இறுதி வரை கட்டுப்பாட்டு உத்தரவை நீட்டித்துள்ளார் அதன் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென்.
கிருமி பரவுவதைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் பொது போக்குவரத்தில் பயணம் செய்யும் போது அனைவரும் முகக்கவசம் அணிவதையும் அவர் கட்டாயமாக்கியுள்ளார்.
102 நாட்களுக்குப் பிறகு நியூசிலாந்தில் கிருமித்தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, சென்ற 11ஆம் தேதி ஆக்லாந்தில் நடைமுறைக்கு வந்த கட்டுப்பாடுகள் வரும் புதன்கிழமை முடிவடையவிருந்தது.

