தடகள வீரர் உசேன் போல்ட்டிற்கு கொரோனா தொற்று

1 mins read
8e9ae7b1-cc26-431b-a325-bf4d8ff19cf9
வேலை நிமித்தமாக விமானப் பயணம் செய்ய வேண்டியிருந்ததால் ஆகஸ்ட் 22ஆம் தேதி கடந்த சனிக்கிழமையன்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாகச் சொன்னார். படம்: ஏஎஃப்பி -

உலக சாதனைக்குச் சொந்தக்காரரும் ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை தங்கம் வென்றவருமான உசேன் போல்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார்.

ஜமைக்காவைச் சேர்ந்த உசேன் போல்ட் தனக்கு தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லை என்ற போதும் வேலை நிமித்தமாக விமானப் பயணம் செய்ய வேண்டியிருந்ததால் ஆகஸ்ட் 22ஆம் தேதி கடந்த சனிக்கிழமையன்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாகச் சொன்னார். அதற்கு முதல்நாள் அவர் தனது 34வது பிறந்தநாளைக் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

அங்கு சில வாரங்களாக 10க்கும் குறைவாக இருந்துவந்த தினசரி கிருமித்தொற்று சம்பவங்கள், கடந்த நான்கு நாட்களாக 60க்கும் மேல் பதிவாகின்றன.

ஒட்டுமொத்தமாக, ஜமைக்காவில் 1,529 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன; 16 பேர் மாண்டுவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்