தென்கொரியத் தலைநகரில் நகரில் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன

தென்கொரியத் தலைநகரில் நகரில் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன

2 mins read
f01ee187-569e-44d7-b749-1506e11925b1
தென்கொரியத் தலைநகர் சோலில் டிசம்­ப­ரில் உயர்­நிலைப் பள்­ளி­யின் இறு­தி­யாண்டு தேர்வு எழு­த­வி­ருக்­கும் மாண­வர்­க­ளுக்கு மட்­டும் இணை­யம் வழி கற்­பித்­த­லில் இருந்து விலக்கு அளிக்­கப்­பட்­டுள்­ளது. படம்: ராய்ட்டர்ஸ் -

சோல்: மாண­வர்­கள், பள்ளி ஊழி­யர்­க­ளுக்­குத் தொற்று ஏற்­பட்­ட­தைத்­தொ­டர்ந்து, தென்­கொ­ரிய தலை­ந­கர் சோலில் பள்­ளி­கள் மற்­றும் பாலர் பள்­ளி­கள் மூடப்­பட்­டன.

நாட்­டின் பாதி மக்­கள்­தொ­கை­யைக் கொண்ட அந்­ந­க­ரில் பல கிரு­மித்­தொற்று குழு­மங்­கள் உரு­வெ­டுத்­த­தைத் ­தொ­டர்ந்து தென்­கொ­ரி­யா­வில் பள்­ளி­கள் இணை­யம் வழி கற்­பித்­த­லுக்கு மாறி­யுள்­ளன.

தென்­கொ­ரி­யா­வின் தொடர்பு தட­ம­றி­தல், பரி­சோ­தனை மற்­றும் சிகிச்சை என்ற அணு­கு­முறை உல­க­ளா­விய மாதி­ரி­யாக கரு­தப்­ப­டு­கிறது.

ஆனால் தற்­போது கிரு­மித் தொற்று குழு­மங்­கள் பெரு­கி­யுள்ள நிலை­யில் கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த தென்­கொ­ரியா போராடிக் கொண்டிருக்கிறது.

இந்­நி­லை­யில் நேற்று 280 புதிய தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கின. பல வாரங்­க­ளாக 30 முதல் 40 தொற்று சம்­ப­வங்­கள் பதி­வாகி வந்த நிலை­யில், தொடர்ந்து கடந்த 12 நாட்­க­ளாக மூன்று இலக்­கத்­திற்கு மேல் பதி­வாகி வரு­கின்­றன.

"இப்­போதே கிரு­மித்­தொற்­றுக் கான வளைவு தட்­டை­யா­கி­விட்­டது என்று அவ­ச­ரப்­பட்டு சொல்­லி­வி­டக் கூடாது.

"கிரு­மித்­தொற்று தொடர்ந்து அதி­க­ரிப்­ப­தற்­கான ஆபத்து இன்­னமும் உள்­ளது," என்­றார் கேசி­டி­சி­யின் துணை இயக்­கு­நர் குவான் ஜுன்-வூக்.

மேலும் கவ­லைக்­கி­ட­மான நிலை­யில் உள்­ள­வர்­க­ளின் எண்­ணிக்கை கடந்த வாரம் மூன்று மடங்கு அதி­க­ரித்­த­தா­க­வும், அத­னால் வரும் நாட்­களில் இறப்பு எண்­ணிக்கை உய­ரக்­கூ­டும் என்­றும் அவர் கவலை தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, கடந்த இரண்டு வாரங்­களில் சுமார் 200 மாண­வர்­கள் மற்­றும் பள்ளி ஊழி­யர்­கள் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கி­யுள்­ள­தாக கல்வி அமைச்­சர் தெரி­வித்­தார்.

எனவே சோல், இஞ்­சி­யோன் நக­ரங்­க­ளி­லும் கியோங்கி மாநி­லத்­தில் உள்ள பாலர் பள்­ளி­கள் மற்­றும் பள்­ளி­கள் வரும் செப்­டம்­பர் மாதம் 11ஆம் தேதி வரை இணையம் வழி கற்­பித்­த­லைத் தொடர அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளன.

வரும் டிசம்­ப­ரில் உயர்­நிலைப் பள்­ளி­யின் இறு­தி­யாண்டு தேர்வு எழு­த­வி­ருக்­கும் மாண­வர்­க­ளுக்கு மட்­டும் இணை­யம் வழி கற்­பித்­த­லில் இருந்து விலக்கு அளிக்­கப்­பட்­டுள்­ளது.

பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை மேலும் அதி­க­ரித்­தால், கடு­மை­யாக சமூக இடை­வெளி நடை­மு­றைப்படுத்­தப்­படும் என்று தென்­கொ­ரிய அதி­கா­ரி­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.