கட்டுப்பாடுகளைத் தளர்த்துகிறது ஹாங்காங்

கட்டுப்பாடுகளைத் தளர்த்துகிறது ஹாங்காங்

1 mins read
4307a072-c73a-4d76-9eaa-d0190f3eeae5
கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­து­வ­தற்கு உள்­ளூர் கிரு­மிப் பர­வல் எண்­ணிக்கை குறை­யும் வரை காத்­தி­ருப்­பது என்­பது சாத்­தி­ய­மற்ற ஒன்று என்­றும் ஹாங்காங்கின் உணவு மற்­றும் சுகா­தார செய­லா­ளர் சோபியா சான் கூறினார். படம்: ராய்ட்டர்ஸ் -

ஹாங்­காங்: ஹாங்­காங்­கில் கடந்த சில வாரங்­க­ளாக தொற்­றுக்கு ஆளா­வோர் எண்­ணிக்கை தொடர்ந்து குறைந்து வரு­வ­தை­ய­டுத்து, வரும் வெள்­ளிக்­கி­ழமை முதல் அங்கு சில கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­படும் என்று அந்­நாட்டு அர­சாங்­கம் அறி­வித்­துள்­ளது.

முன்­ன­தாக நேற்று முடி­வ­டை­ய­வி­ருந்த கட்­டுப்­பா­டு­கள் மேலும் இரண்டு நாட்­க­ளுக்கு அதா­வது வரும் வியா­ழக்­கி­ழமை வரை நீட்­டிக்­கப்­பட்­டது.

அடுத்த இரண்டு நாட்­களில் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்­கை­பெரு­ம­ளவு அதி­க­ரிக்­க­வில்லை என்­றால், உண­வ­கங்­களில் உண­வ­ருந்­து­வ­தற்­கான நேரம் மாலை 6 மணி­யி­லி­ருந்து இரவு 9 மணி­யாக நீட்­டிக்­கப்­படும். மேலும் ஒவ்­வோர் மேசை­யி­லும் இரு­வர் மட்­டுமே அமர அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

திரை­ய­ரங்­கு­கள், அழகு நிலை­யங்­கள், சில விளை­யாட்டு கூடங்­களும் மீண்­டும் செயல்­பட அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் பொது இடங்­கள், பூங்­காக்­களில் உடற்­ப­யிற்சி செய்­வோர் தவிர மற்­ற­வர்­கள் பொது இடங்­களில் முகக்­க­வ­சம் அணி­வது தொடர்ந்து கட்­டா­ய­மா­கவே நீடிக்­கிறது.

தின­சரி தொற்றுகளின் எண்­ணிக்கை குறைந்­து­விட்­டது, என்­றா­லும் கிரு­மித்­தொற்­றி­லி­ருந்து ஹாங்­காங் முற்­றி­லும் விடு­ப­ட­வில்லை என்­று சொன்னார் உணவு மற்­றும் சுகா­தார செய­லா­ளர் சோபியா சான்.

"கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­து­வ­தற்கு உள்­ளூர் கிரு­மிப் பர­வல் எண்­ணிக்கை குறை­யும் வரை காத்­தி­ருப்­பது என்­பது சாத்­தி­ய­மற்ற ஒன்று," என்­றும் அவர் சொன்­னார்.