சுகாதார அமைப்பு: மறுதொற்று குறித்து எந்த முடிவுக்கும் வரவேண்டாம்

சுகாதார அமைப்பு: மறுதொற்று குறித்து எந்த முடிவுக்கும் வரவேண்டாம்

1 mins read
2b8ea4fd-ccb5-45c4-8b85-d5f871d0fb0b
ஐக்கிய நாடுகள் சபை, உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் கோரிக்கைகளை ஏற்று  US$500,000 (S$730,000) தொகையை கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போருக்காக நன்கொடையாக வழங்குகிறது சிங்கப்பூர் அரசாங்கம். படம்: ராய்ட்டர்ஸ் -

ஜெனிவா: கொரோ­னா­வில் இருந்து குண­ம­டைந்த இளை­யர் ஒரு­வர் நான்கு மாதங்­கள் கழித்து மீண்­டும் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­ன­தாக ஹாங்­காங் தெரி­வித்­துள்­ளது.

இதற்­குப் பதி­ல­ளிக்­கும் வகை­யில் பேசிய உலக சுகா­தார அமைப்­பின் தொற்­று­நோ­யி­யல் நிபு­ணர் மரியா வான், மறு­தொற்று குறித்து அவ­ச­ரப்­பட்டு எந்த முடி­வுக்­கும் வர வேண்­டாம் என்று கூறி­யுள்­ளார்.

சீனா­வி­லும் சிலர் மீண்­டும் தொற்­றுக்கு ஆளா­கி­யுள்­ள­தாகச் சொன்ன அவர், அவர்­கள் முழு­வ­தும் குண­ம­டைந்த பிறகு மீண்­டும் தொற்­றுக்கு ஆளா­னார்­களா அல்­லது முத­லில் ஏற்­பட்ட தொற்­றின் கிரு­மியே அவர்­கள் உட­லில் இன்­னும் இருந்­ததா என்­பது இன்­னும் தெளி­வு­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­றார்.

கடந்த ஏப்­ரல் மாதம் தொற்­றி­லி­ருந்து குண­ம­டைந்­த­தாக தெரி­விக்­கப்­பட்ட 33 வயது ஆட­வர் ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரிட்­டன் வழி­யாக ஸ்பெ­யி­னி­லி­ருந்து ஹாங்­காங் திரும்­பிய போது விமான நிலை­யத்­தில் நடத்­தப்­பட்ட பரி­சோ­த­னை­யில் மீண்­டும் தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டது.

இதற்­கி­டையே, நெதர்­லாந்து, பெல்­ஜி­யம் ஆகிய நாடு­க­ளி­லும் கொரோனா தொற்­றி­லி­ருந்து மீண்­ட­இருவருக்கு மீண்­டும் தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தாகக், கிரு­மித்­தொற்று நிபு­ணர்­களை மேற்­கோள்காட்டி டச்சு தேசிய ஒளி­ப­ரப்பு நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

முதல்முறை கிருமித்தொற்றுக்கு ஆளானபோது நோயாளியின் உடலில் உருவான நோய் எதிர்ப்பாற்றல், அதன் மற்றொரு திரிபான கிருமியின் தொற்றைத் தடுக்கப் போதுமானதாக இல்லை என்று கூறினார் பெல்ஜியத்தின் கிருமித் தொற்று நிபுணரான மார்க் வேன் ரேன்ஸ்ட்.