'தென்கிழக்காசியாவைத் தவிர உலகளவில் கிருமிப் பரவல் மெதுவடையத் தொடங்கியுள்ளது'

'தென்கிழக்காசியாவைத் தவிர உலகளவில் கிருமிப் பரவல் மெதுவடையத் தொடங்கியுள்ளது'

1 mins read
4bdcef40-91ca-470d-97e5-3b0a3fad6be4
-

ஜெனிவா: கொரோனா தொற்­றின் பர­வல் இன்­னும் இருந்­தா­லும், தென்­கி­ழக்­கா­சியா மற்­றும் கிழக்கு மத்­தி­ய­ த­ரைக்கடல் பகு­தி­க­ளைத் தவிர, உல­க­ள­வில் தொற்­றுக்கு ஆளா­வோர், உயி­ரி­ழப்­போர் எண்­ணிக்கை மெது­வ­டை­யத் தொடங்­கி­யுள்­ள­தாக உலக சுகா­தார அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

நேற்று வரை ராய்ட்­டர்ஸ் கணக்­கின்­படி, உல­க­ள­வில் 23.65 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான மக்­கள் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும், 811,895 பேர் மாண்­டு­விட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

"ஆகஸ்ட் 23ஆம் தேதி­யு­டன் முடி­வ­டைந்த வாரத்­தில் 1.7 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான புதிய தொற்று சம்­ப­வங்­களும் 39,000 புதிய இறப்­பு­களும் பதி­வா­கி­யுள்­ளன.

"இது முந்­தைய வாரத்­து­டன் ஒப்­பி­டும்­போது, தொற்­றுக்கு ஆளா­வோர் எண்­ணிக்­கை­யில் நான்கு விழுக்­கா­டும் உயி­ரி­ழப்­பு­க­ளின் எண்­ணிக்­கை­யில் 12 விழுக்­கா­டும் குறைவு," என்று சுகா­தார அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

தென்­கி­ழக்கு ஆசி­யா­வில் புதிய சம்­ப­வங்­கள் 28 விழுக்­கா­டும் உயி­ரி­ழப்­பு­கள் 15 விழுக்­கா­டும் பதி­வா­கின.

பெரும்­பா­லான சம்­ப­வங்­கள் இந்­தி­யா­வில் பதி­வா­கிறது என்­றா­லும் நேப்­பா­ளத்­தி­லும் கிரு­மித்­தொற்று வேக­மாக பரவி வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கிழக்கு மத்­திய தரைக்­க­டல் பகு­தி­யில் புதிய சம்­ப­வங்­கள் 4 விழுக்­காடு அதி­க­ரித்­துள்­ளன என்­றா­லும் உயி­ரி­ழப்­பு­கள் குறைந்­துள்­ளன.