வாஷிங்டன்: குடியரசுக் கட்சியின் பிரசாரக்கூட்டத்தில் நேற்று முன்தினம் உரையாற்றிய திருவாட்டி மெலனியா டிரம்ப், தமது கணவர் டோனல்ட் டிரம்ப்பை அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கும்படி அமெரிக்கர்களைக் கேட்டுக்கொண்டார்.
அமெரிக்காவை உலுக்கி வரும் கொரோனா கிருமித்தொற்று, இனவாதப் பிரச்சினை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு தமது அனுதாபத்தை அவர் தெரிவித்துக்கொண்டார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது.
அதற்கு முன்னதாக குடியரசுக் கட்சியும் ஜனநாயகக் கட்சியும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
ஜனநாயகக் கட்சியின் சார்பாக திரு ஜோ பைடன் போட்டியிடுகிறார்.
"கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு தம்மால் முடிந்த நல்லதை செய்யாமல் டோனல்ட் டிரம்ப் ஓய்வெடுக்க மாட்டார்.
"கிருமித்தொற்றின் காரணமாக தங்கள் அன்புக்குரியவர்களைப் பறிகொடுத்தோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்," என்று திருவாட்டி மெலனியா டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவில் நிலவும் இனவாதப் பிரச்சினை குறித்தும் அவர் பேசினார்.
"நீதி கேட்பதாகக் கூறி நடத்தப்படும் வன்முறையை நிறுத்த வேண்டும். ஒருவரின் இனத்தை வைத்து அவரைப் பற்றி முடி
வெடுக்கக்கூடாது," என்று திருவாட்டி மெலனியா கேட்டுக்கொண்டார்.

