பெய்ஜிங்: 'டிக்டாக்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் மேயர் பதவி விலகியுள்ளார். அவர், அந்த நிறுவனத்தில் சேர்ந்து மூன்று மாதங்களே ஆன நிலையில் பதவியை துறந்துள்ளார்.
இதற்கிடையே அவருக்குப் பதிலாக அமெரிக்காவில் உள்ள பொது நிர்வாகி வனிசா பாப்பாஸ் இடைக்காலமாக நியமிக்கப்படுவதாக டிக்டாக் நிறுவனம் தெரிவித்தது.
சென்ற ஜூன் மாதம் டிக்டாக் நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு புகழ்ெபற்ற வால்ட் டிஸ்னி நிறுவனத்தில் நேரலை பிரிவில் உயர்மட்ட நிர்வாகியாக கெவின் மேயர் பணியாற்றினார்.

